வாதத்தை வாதத்தால் வெல்ல வேண்டும்-வந்து
வாதிட்டோர் வாய்மூடிச் செல்ல வேண்டும்!
பேதமின்றி கருத்துகள் மோத வேண்டும்-அவை
பெருமழை பேரிடிபோல் அமைய வேண்டும்!
சொல்லுகின்ற சொல்தரமாய் அமைய வேண்டும்-என்றும்
கடுசொல் அதில்கலவா தொழிய வேண்டும்!
சொல்லி வைத்த சொல்லை மண்ணில் மற்றொரு சொல்
வெல்லவழி இல்லாது அமைய வேண்டும்!
கருத்தாழம் வாதத்தில் துள்ள வேண்டும்-அது
காண்பவர் உள்ளத்தை அள்ள வேண்டும்!
இருதரப்பு வாதமும் சிறக்க வேண்டும்-அதன்
இடைஇடையே பேச்சில் கனல் பறக்க வேண்டும்!
வாதிட்டோர் தனை மாந்தர் மதிக்க வேண்டும்-அதன்
வாதத்தை புது வரவாய் ஏற்க வேண்டும்!
கோதில்லா வாதத்தின் உட்பொருளை-இந்தக்
குவலயமே தமிழ் மறையாய் போற்ற வேண்டும்!
வாதிட்டோர் வாய்மூடிச் செல்ல வேண்டும்!
பேதமின்றி கருத்துகள் மோத வேண்டும்-அவை
பெருமழை பேரிடிபோல் அமைய வேண்டும்!
சொல்லுகின்ற சொல்தரமாய் அமைய வேண்டும்-என்றும்
கடுசொல் அதில்கலவா தொழிய வேண்டும்!
சொல்லி வைத்த சொல்லை மண்ணில் மற்றொரு சொல்
வெல்லவழி இல்லாது அமைய வேண்டும்!
கருத்தாழம் வாதத்தில் துள்ள வேண்டும்-அது
காண்பவர் உள்ளத்தை அள்ள வேண்டும்!
இருதரப்பு வாதமும் சிறக்க வேண்டும்-அதன்
இடைஇடையே பேச்சில் கனல் பறக்க வேண்டும்!
வாதிட்டோர் தனை மாந்தர் மதிக்க வேண்டும்-அதன்
வாதத்தை புது வரவாய் ஏற்க வேண்டும்!
கோதில்லா வாதத்தின் உட்பொருளை-இந்தக்
குவலயமே தமிழ் மறையாய் போற்ற வேண்டும்!
0 comments:
Post a Comment