Friday, July 8, 2016

அப்துல்கலாம் :

Posted by Unknown on 7:43 AM with No comments
அப்துல்கலாம் :

1.   நம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம் -ஆனால்
     அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.

2.உலகம் உன்னை அறிவதைவிட உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள் .

3.வாழ்வில் வெற்றிபெற எத்தனை நண்பர்கள் வேண்டுமானாலும் இருக்கலாம்
   ஆனால் தோல்வி பெறாமல் இருக்க ஒரு எதிரி யாவது இருக்க வேண்டும் .

4.இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றில் ஒரு பக்கம் ஒதுக்க பட்டுள்ளது.
    ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கையில்தான் உள்ளது.

5. கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும் .
     கண்ணை திறந்து பார் நீ அதை வென்று விடலாம்

அறிஞர் அண்ணாவின் பேச்சாற்றல்

Posted by Unknown on 7:33 AM with No comments
வாதத்தை வாதத்தால் வெல்ல வேண்டும்-வந்து
வாதிட்டோர்  வாய்மூடிச்  செல்ல வேண்டும்!
பேதமின்றி கருத்துகள் மோத வேண்டும்-அவை
பெருமழை பேரிடிபோல் அமைய வேண்டும்!

சொல்லுகின்ற சொல்தரமாய் அமைய வேண்டும்-என்றும்
கடுசொல் அதில்கலவா  தொழிய வேண்டும்!
சொல்லி வைத்த சொல்லை மண்ணில்  மற்றொரு சொல்
வெல்லவழி இல்லாது அமைய வேண்டும்!

கருத்தாழம் வாதத்தில் துள்ள வேண்டும்-அது
காண்பவர் உள்ளத்தை அள்ள  வேண்டும்!
இருதரப்பு வாதமும் சிறக்க வேண்டும்-அதன்
இடைஇடையே  பேச்சில் கனல் பறக்க வேண்டும்!

வாதிட்டோர்  தனை  மாந்தர் மதிக்க வேண்டும்-அதன்
வாதத்தை புது வரவாய்  ஏற்க வேண்டும்!
கோதில்லா வாதத்தின் உட்பொருளை-இந்தக்
குவலயமே  தமிழ் மறையாய் போற்ற வேண்டும்!





Thursday, June 30, 2016

தேசிய ஒருமைப்பாடு

Posted by Unknown on 6:09 AM with No comments
ஒன்று தான்  ஜாதி என்று இங்கு கூடுவோம்
ஒருவனே தேவன் என்று பண் பாடுவோம்

இமயம் முதல் குமரி வரை
வாழும் மாந்தர் எல்லாம்
இந்தியத்தாய் பெற்றுடுத்த
பிள்ளை  என்று பாடுவோம்

எம்மதமும் சம்மதமே 
என்று கூடுவோம்
ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு
என்று பாடுவோம்

ஜாதிமதம் பேசுவோரை தேடி சாடுவோம்-அந்த
ஜாதியினை வேறறுத்து
குழியில் மூடுவோம்

ஆதியிலே தோன்றியது
ஆதாம்  ஈவ் என்றால்
அவனிவாழ் மாந்தர் எல்லாம்
அவரின் சேய்கள் அன்றோ!!


செய்தொழிலால்  உருவான
ஜாதியை முன்வைத்து-நாம்
மனிதநேயம்   தனைமறந்து
போரிடுதல் நன்றோ?

சொட்டு ரத்தம்  உள்ளவரை ஓயமாட்டோம்
சோம்பல் கொண்டு என்றும் நாங்கள் சாய மாட்டோம்

எல்லையிலே தொல்லைதரும்
புல்லர்தமை வெல்வோம்
இதையரின் வீரமதை
உலகறிய செய்வோம்

இளைஞரின் நாட்டுப்பற்று 

                           (1)

                            
எங்கள் தேசம் எங்கள் இந்தியா
எங்கள் இந்தியா  இது எங்கள் இந்தியா
எம் தாயின் மடியில் சுகம் கண்டோம்
தாய்மையின் மறு உருவே   நீதான் இந்தியா

                          (2)
விண்ணும் மண்ணைத்  தொட்டாலும்
மண் விண்ணை நோக்கி பறந்தாலும்
எங்கள் இளையபாரதம் என்றும் போராடும்
பாரத பெருமை   காத்திட போராடும்

                         (3)
எளியோரும் வலியோரும் இனிமை
வாழ்வு வாழ்ந்திடவே
இனி வரும் நாளில் முயற்சி செய்வோம்
முயற்சி செய்து தடை தகர்ப்போம்
எழுச்சி கொண்டு வழி வகுப்போம்
                        
                    (4)

விடிய நல்ல காலை வரும்
வெற்றி என்னும் ஓலை தரும்
எங்கள் சுவாசம் கூட
தேசப்பற்று வீசுமே

               (5)
இளைய பாரதம்  வருக வருகவே
நம் பாரதத்தின் பெருமை காக்க
வருக வருகவே -பாரத பெருமை நீ போற்று
பாரதம் உன்னை வாழ்த்திடும்

                                                    





Tuesday, June 28, 2016

சோதனையும் சாதனையும்

Posted by Unknown on 7:13 PM with No comments
சோதனையுள் சாதனைகள் மறைந்தி ருக்கும்
       சூட்சமத்தை நாம்உ ணர்ந்து கொள்ள வேண்டும்
சோதனையைச் சாதனையால் முறிய டித்து-நல்
       சொர்க்கத்தை இப்புவியில் காண வேண்டும்!

உழைப்பினுள் மறைந்த்துள்ள "உயர்வு தன்னை"
         உதாசினம் செய்யாது உணர வேண்டும்!
உழைப்புக்குச் செயல்வடிவம் தந்து-அந்த
          உயர்இமய உச்சியிலே நிற்க வேண்டும்!

தனக்குள்ளே தூங்குகின்ற தன்மா னத்தைத்
    தயங்காது தட்டியே எழுப்ப வேண்டும்!
பாலைவனம் பசும்சோலை ஆகிவிடும்-நம்
    பாருக்குள் தேனாறு புகுந்து விடும்!

சோம்பலில்  மறைந்துள்ள சுருசு ருப்பைச்
    சொல்லாமல் சோர்வின்றிப் பணியில் காட்டு!
ஆம்பல்போல் தலைதூக்கி உயரும் வாழ்வு  
    அவனியிலே உனக்கில்லை  என்றும் தாழ்வு!


சிந்திப்போமா?

உண்ணும் உணவு உடல்முழுதும் பாயும்
    எண்ணிய எண்ணங்கள் எங்குமே பாயும்!
எண்ணத்தில் எழுகின்ற ஒழுங்கற்ற ஆசையே இன்னலின் ஆணிவேர்!
   இப்புவியில் எழுகின்ற இன்னலின் ஆணிவேர்!

துணிவான நேர்முக அணுகுமுறை உள்ளோர்க்குத் 
    துணை நின்று தெய்வம் வெற்றிவாகை சூடும்!
வாழ்க்கையில் வெற்றிபெற "நண்பர்கள்" தேவை 
    வாழ்வெல்லாம் வெற்றிபெற எதிரிகள் தேவை!


எது பெரிது?

வெற்றிதரும் இனிமையைக் காட்டிலும் மாந்தர்க்குத் 
தோல்விதரும் பாடமே உயர்ந்த பாடம்!


இளமைதரும் சக்தியைக் காட்டிலும் புவியோர்க்கு 
முதுமைதரும் அனுபவமே சிறந்த பாடம்!

உறவுதரும் இன்பத்தை காட்டிலும் மாந்தர்க்குப்  
பிரிவுதரும் துன்பமே பெரிய பாரம்!

வசதித்தரும் வளமான வாழ்வைவிட அனைவர்க்கும் 
வறுமை தரும் போராட்டம் பெரிய தாகும்!

பணம்தரும் சொர்க்கத்தை காட்டிலும் மாந்தர்க்குப் 
பண்புதரும் பாசமே பெரிய தாகும்!

விதித்தரும் மரணத்தை காட்டிலும் மாந்தர்க்கு
மதித்தரும் நல்வாழ்வே சிறந்த பாடமாகும்!


வாழ்க்கை
 

வாழ்க்கை ஒருபரிசு; அதை ஏற்கவேண்டும்-ஏற்று 
வையத்தார் புகழவாழ்ந்து காட்ட வேண்டும்!
வாழ்க்கை ஒருஅழகு அதைக்  கொள்ள வேண்டும்-நம் 
வாழ்நாளில் அதனை ரசித்து செல்லவேண்டும்!

வாழ்க்கை ஒரு உணர்வு அதை ஏற்கவேண்டும் 
விளையாஉன் உணர்வோடு சேர்க்க வேண்டும்!
வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் ஏற்கவேண்டும்-ஏற்று 
 என்றும்கை நழுவாது பார்க்க வேண்டும்!


வாழ்க்கை ஒரு கடமை அதை ஏற்கவேண்டும் -ஏற்று 
வரும்துயரை வென்றுபுகழ்  சேர்க்க வேண்டும்!
வாழ்க்கை ஒரு இலக்கத்தை அடைய வேண்டும்  அடைந்து 
இன்னல்வென்று இலக்கினை அடையவேண்டும் !

காவலர்கள்

Posted by Unknown on 5:15 AM with No comments
மக்களெல்லாம் மண்மீது  வாழ்வ  தற்கும்
      மனுநீதி மாநிலத்தில் தழைப்ப தற்கும்
கடல்சூழ்ந்த காசினி நிலைப்ப தற்கும்
       காவலரின் சேவையிங்கு  தேவை யன்றோ!

காவலர்கள் இல்லை யென்றால்  என்னவாகும் ;
       கன்னியர்கள்  கற்பெல்லாம் சோரம் போகும்;
கயவர்களின் கையிலே சிக்கி கொண்டு
        காசினியே  கொலைக்களமாய் மாறிப் போகும்!

காத்து வைத்த பொருளெல்லாம் கொள்ளை போகும்;
      கயவர்களின் நடமாட்டம் மிகுதி யாகும்!
கெட்டவர்க்கு  நல்லவர்கள் அஞ்சி வாழும்
      கேவலமும் நாட்டுக்குள் மலிந்து போகும்!

திருமணமாய் இருந்தாலும் அழைக்கின் றீர்கள்
      திருடர்கள் வந்தாலும் அழைக்கின் றீர்கள்;
மறுமணமாய் இருந்தாலும் அழைக்கின் றீர்கள்
     மாண்டாலும் எங்களையே  அழைக்கின் றீர்கள்!

நல்லதற்கும் கெட்டதற்கும்  அழைக்கின் றீர்கள்
     நம்பிக்கைக் கொண்டுவிட்ட காரணத்தால் ;
கறிக்குதவும்  'வேப்பி'லையா ய்  எண்ணா  வண்ணம்
    காவலரை கண்ணியமாய்  நடத்து வீரா?


Friday, June 24, 2016

Every night in my dreams !!!!

Posted by Heart hacker on 7:37 AM with No comments
பனி அடர்ந்தத ஜன்னல் வழி..
கருமையின் விளிம்பில் வானத்தின் வளைவுகள்..
இரவென்று இன்னிசை பேச..
இரவின் மடியில்..
குளிரின் பிடியில்..
உன் ஸ்பரிசம் தேடி..
மெத்தையின் மீது மெத்தயாய் நான்..!

உன் பார்வைகள் என்னை அம்பாய் தைக்க..
தைத்த இடமெல்லாம் அமுதம் வழியும்..
வெட்க்கதின் புன்னகையொடு நீ..!..
இன்னும் கொன்று விடு..
இது மௌனத்தின் சம்மதம்..!..
உன் அனைப்பின்
கதகதப்பில் நான் உரைய..
இதழின் கையொப்பம் என்
கண்களில்..

தேவதை இதழில் தொடங்கிய பயணம்
இடையில் முடிய..
படர்ந்த பனியோ புகையாய் மறைந்ததே..
உன் முகத்தோடு..!

காலை என்று சுட்ட சூரியன்
வண்ணங்கள் காட்ட..
காற்றில் எந்தன் கைகள் மட்டும்
உன் ஸ்வாசம் தேடிய வன்னம்..
அந்த வன்னம் மட்டும் கண்ணில்
பட மறுத்து ஒலிந்து கொள்ளும்..இது..
இறைவன் விளையாட்டின் ஒரு இழை..!

எட்டுத் திக்கும் தேடி தேடி..
வழி மேல் விழியோடு வழிந்த கண்கள்..
எட்டா தூரத்தில் புன்னகை..
இருந்தும் உயிர் விட மனமில்லை..!

போர்வைக்குள் தனி உலகம்..
இன்னும் ஒரு இரவுப் பயணம்..
இன்று இரவு காத்திருக்கும்..!
உன்னுடன்..!
அதற்காக மட்டுமே..
பகல் முழுதும் வாழ்கிறேன்..!!!
இரவுக்கு: பன்னிரெண்டு மணி முப்பது நிமிடம் பத்து
வினாடிகள்..

முகமூடிகள்

Posted by Heart hacker on 7:13 AM with No comments
ன்று ஒரு நாள்...
நானும் சிறு பிள்ளையாய்..!!
ஊரெங்கும் அழகாய் மின் விளக்குகள்..
திருவிழா என்றார்கள்..!!
ராஜாவாய் கடைதெரு பயணம்...
காரணம் கால்சட்டையில் இருந்த பத்து ரூபாய்..!!
அங்கும் இங்கும் பார்த்த கண்கள்..
பாதைக் கடை அணிவகுப்பில் சட்டென்று பாதம் நிற்க..!!
ஆசையாய் வாங்கிய முகமூடிகள்...
பச்சை நீலம் மஞ்சள் சிவப்பு வெள்ளை..!!
வாழ்க்கை பாதையில் அடிமேல் அடிவைத்து
பயணம் தொடர..
அன்று விளயாட்டாய் அனிந்த முகமூடிகள்
இன்றும் கண்முன்...
இம்முறை வண்ணங்கள் இல்லை...
முகங்களாக..
முகங்கள் பொதிந்த எண்ணங்களாக...!!
அதற்குள் சிக்கி சிதைந்தவனாய்..
மலைத்து போய் நின்ற என்னை..
“மண்டி இடு” என்று அழைத்தது
மாதா கோவில் மணி...!!
மணி ஓசைக்கு செவிமடித்து...
அன்னையின் மடி தெடி சென்றால்..
கடவுளின் முன் முகமூடி
செல்லவில்லை போலும்..
கண்ணீர் துளிகள்..
மெழுகுவர்த்தியொடு சேர்ந்து..
உருகும் இதயங்கள்...!!
“இறைவா என் முகத்திரை கிழியாமல் பார்த்துகொள்”!!
ஒரு ரூபாய் காணிக்கை..!!
ஏளனச் சிரிப்போடு நான்
மறுபடியும் பாதையில்...
எனக்கான முகத்திரை தெடி..!!
**kavi**
<heart hacker>