Tuesday, June 28, 2016

காவலர்கள்

Posted by Unknown on 5:15 AM with No comments
மக்களெல்லாம் மண்மீது  வாழ்வ  தற்கும்
      மனுநீதி மாநிலத்தில் தழைப்ப தற்கும்
கடல்சூழ்ந்த காசினி நிலைப்ப தற்கும்
       காவலரின் சேவையிங்கு  தேவை யன்றோ!

காவலர்கள் இல்லை யென்றால்  என்னவாகும் ;
       கன்னியர்கள்  கற்பெல்லாம் சோரம் போகும்;
கயவர்களின் கையிலே சிக்கி கொண்டு
        காசினியே  கொலைக்களமாய் மாறிப் போகும்!

காத்து வைத்த பொருளெல்லாம் கொள்ளை போகும்;
      கயவர்களின் நடமாட்டம் மிகுதி யாகும்!
கெட்டவர்க்கு  நல்லவர்கள் அஞ்சி வாழும்
      கேவலமும் நாட்டுக்குள் மலிந்து போகும்!

திருமணமாய் இருந்தாலும் அழைக்கின் றீர்கள்
      திருடர்கள் வந்தாலும் அழைக்கின் றீர்கள்;
மறுமணமாய் இருந்தாலும் அழைக்கின் றீர்கள்
     மாண்டாலும் எங்களையே  அழைக்கின் றீர்கள்!

நல்லதற்கும் கெட்டதற்கும்  அழைக்கின் றீர்கள்
     நம்பிக்கைக் கொண்டுவிட்ட காரணத்தால் ;
கறிக்குதவும்  'வேப்பி'லையா ய்  எண்ணா  வண்ணம்
    காவலரை கண்ணியமாய்  நடத்து வீரா?


0 comments:

Post a Comment