ஒன்று தான்
ஜாதி என்று இங்கு கூடுவோம்
ஒருவனே தேவன் என்று பண் பாடுவோம்
இமயம் முதல் குமரி வரை
வாழும் மாந்தர் எல்லாம்
இந்தியத்தாய் பெற்றுடுத்த
பிள்ளை என்று பாடுவோம்
எம்மதமும் சம்மதமே
என்று கூடுவோம்
ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு
என்று பாடுவோம்
ஜாதிமதம் பேசுவோரை தேடி சாடுவோம்-அந்த
ஜாதியினை வேறறுத்து
குழியில் மூடுவோம்
ஆதியிலே தோன்றியது
ஆதாம் ஈவ் என்றால்
அவனிவாழ் மாந்தர் எல்லாம்
அவரின் சேய்கள் அன்றோ!!
செய்தொழிலால் உருவான
ஜாதியை முன்வைத்து-நாம்
மனிதநேயம் தனைமறந்து
போரிடுதல் நன்றோ?
சொட்டு ரத்தம்
உள்ளவரை ஓயமாட்டோம்
சோம்பல் கொண்டு என்றும் நாங்கள் சாய மாட்டோம்
எல்லையிலே தொல்லைதரும்
புல்லர்தமை வெல்வோம்
இதையரின் வீரமதை
உலகறிய செய்வோம்
உலகறிய செய்வோம்
இளைஞரின் நாட்டுப்பற்று
(1)
எங்கள் தேசம் எங்கள் இந்தியா
எங்கள் இந்தியா
இது எங்கள் இந்தியா
எம்
தாயின் மடியில் சுகம் கண்டோம்
தாய்மையின் மறு உருவே
நீதான் இந்தியா
(2)
விண்ணும் மண்ணைத்
தொட்டாலும்
மண்
விண்ணை நோக்கி பறந்தாலும்
எங்கள் இளையபாரதம் என்றும் போராடும்
பாரத
பெருமை
காத்திட போராடும்
(3)
எளியோரும் வலியோரும் இனிமை
வாழ்வு வாழ்ந்திடவே
இனி
வரும் நாளில் முயற்சி செய்வோம்
முயற்சி செய்து தடை தகர்ப்போம்
எழுச்சி கொண்டு வழி வகுப்போம்
(4)
விடிய நல்ல காலை வரும்
வெற்றி என்னும் ஓலை தரும்
எங்கள் சுவாசம் கூட
தேசப்பற்று வீசுமே
(5)
இளைய
பாரதம்
வருக வருகவே
நம்
பாரதத்தின் பெருமை காக்க
வருக
வருகவே -பாரத பெருமை நீ போற்று
பாரதம் உன்னை வாழ்த்திடும்
0 comments:
Post a Comment